ராகுலின் பதிவை தாமாக நீக்கியது டுவிட்டர்

 

ராகுலின் பதிவை தாமாக நீக்கியது டுவிட்டர்

சர்ச்சை ஆனதை அடுத்து ராகுல்காந்தியின் அந்த பதிவினை டுவிட்டர் நிர்வாகமே நீக்கியிருக்கிறது.

ராகுலின் பதிவை தாமாக நீக்கியது டுவிட்டர்

டெல்லியில் பாதிரியார் ராதே ஸ்யாம்(45) மற்றும் சுடுகாட்டின் தகன மேடை ஊழியர்கள் லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோர் நீதி கேட்டு டெல்லியில் போராடுகின்றனர். மக்களும் அவர்களுடன் கைகோர்த்து போராடுகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்காந்தி, நீதி கேட்கும் போராட்டத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ராகுலின் பதிவை தாமாக நீக்கியது டுவிட்டர்

பெற்றோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அந்த பெற்றோரின் கண்ணீர் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறது. பட்டியலின மகளும் நாட்டின் மகள்தான் என்று விசயம் எனக்கு புரிகிறது. நீதி கேட்டு செல்லும் பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன் என்று டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார் ராகுல். அதில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லும் புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார் ராகுல்.

இதுதான் சர்ச்சை ஆனது. ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த பதிவுக்காக டுவிட்டர் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் ஒரு கடிதம் எழுதியிருந்தது.

ராகுலின் பதிவை தாமாக நீக்கியது டுவிட்டர்

அந்த கடிதத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தினை (முகத்தை மறைக்காமல்) வெளியிட்டிருப்பது, சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றை மீறிய செயல். இதன் மூலமாக அச்சிறுமியின் அடையாளத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். அதனால், டுவிட்டர் பக்கம் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பதிவினை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பின்னர் அதுகுறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த ராகுலின் அந்த பதிவினை டுவிட்டர் நிர்வாகமே நீக்கியிருக்கிறது.