ராகுல்காந்தியை விடாது துரத்தும் டுவிட்டர் சர்ச்சை

 

ராகுல்காந்தியை விடாது துரத்தும் டுவிட்டர் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் இந்த வழக்கினை தொடர்ந்திருக்கிறார்.

ராகுல்காந்தியை விடாது துரத்தும் டுவிட்டர் சர்ச்சை

டெல்லியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது பாதிரியார் மற்றும் தகனம் செய்யும் நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை தேவை என்று டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுமியின் பெற்றோரை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை அவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

அந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சிறுமியின் பெற்றோரின் படத்தை மறைக்காமல் அவர் பதிவிட்டிருந்தது சர்ச்சயை எழுப்பியது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் டுவிட்டர் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு பதிவினை நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. டுவிட்டர் நிறுவனமே ராகுலின் அந்த டுவிட்டர் பதிவினை நீக்கியது.

ராகுல்காந்தியை விடாது துரத்தும் டுவிட்டர் சர்ச்சை

இந்நிலையில், ராகுலின் அந்த டுவிட்டர் பதிவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பி மாணிக் தாகூர் கேசி வேணுகோபால் ஆகியோரும் மறு பதிவேற்றம் செய்திருந்தனர். அந்த புகைப்படத்தை கோடிக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவருடைய கட்சிக்காரர்கள் 5000 பேர் அந்த புகைப்படத்தில் மறு பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இது தவறு . பாதிக்கப்பட்ட சிறார்கள் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி தோழமைகள் ,அக்கம்பக்கத்தினர் பெயரையோ புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடக் கூடாது என்று பல்வேறு சட்டங்கள் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் மீறி விட்டதாக ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டி இருக்கிறார் முகமது ரஸ்வி. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தார் முகமது ரஸ்வி.

இந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ராகுல்காந்தி, எம்பிக்கள் மாணிக்தாகூர், கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இளம் சிறார்கள் நீதி சட்டப்பிரிவு 74 , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு 23( 2), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228 (ஏ)ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் நடுவர் பிரவீன்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமார், நீலமேகம் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.