டிவி டுடே நெட்வொர்க் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு.. செலவினம் 10 சதவீதம் உயர்வு

 

டிவி டுடே நெட்வொர்க் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு.. செலவினம் 10 சதவீதம் உயர்வு

டிவி டுடே நெட்வொர்க் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.37.34 கோடி ஈட்டியுள்ளது.

ஊடகத்துறையை சேர்ந்த 2021 ஜூன் காலாண்டில் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிவி டுடே நெட்வொர்க் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.37.34 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் டிவி டுடே நெட்வொர்க் நிகர லாபமாக ரூ.12.76 கோடி ஈட்டியிருந்தது.

டிவி டுடே நெட்வொர்க் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு.. செலவினம் 10 சதவீதம் உயர்வு
டிவி டுடே நெட்வொர்க்

2021 ஜூன் காலாண்டில் டிவி டுடே நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த வருவாய் 21.09 சதவீதம் உயர்ந்து ரூ.212.46 கோடியாக அதிகரித்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் டிவி டுடே நெட்வொர்க் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.175.45 கோடி ஈட்டியிருந்தது. 2021 ஜூன் காலாண்டில் டிவி டுடே நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த செலவினம் 9.85 சதவீதம் ரூ.162.19 கோடியாக உயர்ந்துள்ளது.

டிவி டுடே நெட்வொர்க் லாபம் 3 மடங்கு அதிகரிப்பு.. செலவினம் 10 சதவீதம் உயர்வு
டிவி டுடே நெட்வொர்க்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது டிவி டுடே நெட்வொர்க் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.09 சதவீதம் குறைந்து ரூ.303.60ஆக இருந்தது.