முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி சென்று பிடித்த “கொரோனா மனிதர்” !

முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி சென்று பிடித்த “கொரோனா மனிதர்” !

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி சென்று பிடித்த “கொரோனா மனிதர்” !

இந்த சூழலில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா போன்று வேடம் அணிந்த நபர் ஒருவர் முக கவசம் அணியாமல் சென்றவர்களை துரத்திப் பிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் சாரு தொடங்கி வைத்த நிலையில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி சென்று பிடித்த “கொரோனா மனிதர்” !

அத்துடன் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அத்துடன் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்களும் அளிக்கப்பட்டன.