ஓட்டப்பிடாரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம்… அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்…

ஓட்டப்பிடாரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம்… அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்…

தூத்துக்குடியில் வீரபண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள மேலதட்டப்பாறை கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்க மன்னர் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை போட்டி நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம்… அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்…

சின்னமாட்டு வண்டி, பெரியமாட்டு வண்டி என இருபிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி போட்டி 10 கிலோ மீட்டர் தொலைவுக்கும், சிறிய மாட்டு வண்டி போட்டி 6 கிலோ மீட்டர் தொலைவுக்கும் நடைபெற்றது. இரு பிரிவுகளிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மாட்டு வண்டிகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இதனை சாலையின் இருபுறங்களிலும் கூடி நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

ஓட்டப்பிடாரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம்… அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்…

இறுதியில் இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.