தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவிலும் தரையிறங்க அனுமதி

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவிலும் தரையிறங்க அனுமதி

தூத்துக்குடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளம் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் 14 ஆண்டுகளாக விமான சேவை முறையாக தொடங்கப்பட வில்லை. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவை முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த விமான சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 14 ஆண்டுகளாக இந்த விமான சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவிலும் தரையிறங்க அனுமதி

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் தொடங்கப்பட்டு 28 ஆண்டுகளான நிலையில், விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கான தகுதிச் சான்றை VFR இலிருந்து IFR ஆக தரம் உயர்த்தி சிவில் விமானத்துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி தூத்துக்குடி விமான நிலையம் இரவிலும் விமானம் தரையிறங்கும் வசதியை பெற்றுள்ளது. இதன் மூலம் கூடுதல் விமான சேவையை தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.