வைரஸை எதிர்த்துப் போராடும் மூலிகை மஞ்சள்!

 

வைரஸை எதிர்த்துப் போராடும் மூலிகை மஞ்சள்!

மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வா… என்றொரு திரைப்படப் பாடல் உண்டு. மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படும் மஞ்சளுக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. புற்றுநோயைக்கூட குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த மஞ்சள் பற்றிப் பார்ப்போம்.

வைரஸை எதிர்த்துப் போராடும் மூலிகை மஞ்சள்!குர்க்குமின்:
மஞ்சள் என்பது ஒருவகை பூண்டுச் செடி. இதன் வேரில் வளரும் கிழங்கைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். நறுமணப்பொருளான மஞ்சளை தமிழர்கள் சடங்குகளில் புனிதப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். குர்க்குமின் என்ற வேதிப்பொருளே மஞ்சளுக்கு நிறத்தைக் கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவக் குணங்களையும் பெற்றுத்தருகிறது.

முட்டா, கஸ்தூரி, விரலி, காஞ்சிரத்தினம், குரங்கு, பலா, ஆலப்புழா மஞ்சள் மற்றும் கரி மஞ்சள், நாக மஞ்சள், குட மஞ்சள், மர மஞ்சள் என மஞ்சளில் பலவகை இருந்தாலும் ஆலப்புழை மஞ்சள்தான் உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

வைரஸை எதிர்த்துப் போராடும் மூலிகை மஞ்சள்!
விரலி மஞ்சள்:
உருண்டை வடிவத்தில் வடிவத்தில் முட்டா மஞ்சளை கல்லில் உரைத்தோ, அரைத்தோ முகத்துக்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் வாசனை நிறைந்தது. இது வில்லை வில்லையாக தட்டையாக இருக்கும். விரலி மஞ்சள்… நீளமாக குச்சி வடிவில் இருக்கும் இந்த மஞ்சளை கறிமஞ்சள் என்பார்கள். சமையலில் பயன்படுத்தப்படுவதே விரலி மஞ்சள்.
மஞ்சளுக்கென நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

பெரும்பாலும் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக்குளிப்பது வழக்கம். மஞ்சள் பூசுவதால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுப்பதுடன் சருமத்திலும் சுருக்கம், தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கும். அதேபோல் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் தடுப்பதில் மஞ்சளுக்கு பங்கு உண்டு.

வைரஸை எதிர்த்துப் போராடும் மூலிகை மஞ்சள்!
சளித்தொல்லை:
சளித்தொல்லை, மூக்கடைப்பு, ஜலதோஷம் ஏற்பட்டதும் மஞ்சளுடன் சுண்ணாம்பு சேர்த்து ஒரு கரண்டியில் வைத்து லேசாக சூடாக்கி பொறுக்கும் சூட்டில் நெற்றி, மூக்குப்பகுதியில் தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளித்தொல்லையின்போது மஞ்சளைத் தீயில் சுட்டு சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும். சாம்பிராணி புகையில் மஞ்சள்தூளைப் போட்டு அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினால் கிருமிகள், சிறு பூச்சிகள் ஒழியும்.

புற்றுநோய்:
பச்சை மஞ்சள் புற்றுநோயை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக இதிலுள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். அதேவேளையில் இதிலுள்ள குர்க்குமின் என்ற ரசாயனப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாவதற்குக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி படைத்தது.

பாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து அருந்தும் வழக்கம் பலரிடையே உள்ளது. நெஞ்சுச்சளியால் அவதிப்படுபவர்கள் பாலுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிட்டு அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.