‘நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ டிடிவி தினகரன் ட்வீட்!

 

‘நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ டிடிவி தினகரன் ட்வீட்!

கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தமிழகத்தின் கயத்தாறு பகுதியை சேர்ந்த 80 பேர் சிக்கினர். முதற்க்கட்டமாக நடைபெற்ற மீட்புப்பணியில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மீட்புப்பணி தொடர்ந்து வரும் நிலையில் இதுவரை நிலச்சரிவில் இருந்து 51 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

‘நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ டிடிவி தினகரன் ட்வீட்!

இந்த நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் ‘என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பெற்றோரை இழந்திருப்பவர்களுக்கு கல்வி உதவி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதுடன், பிள்ளைகளை இழந்து தவிக்கும் வயது முதிர்ந்த பெற்றோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கும் முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.