ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டுவந்த ராம கோபாலன் மறைவால் வருத்தமடைகிறேன் – டிடிவி தினகரன்

 

ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டுவந்த ராம கோபாலன் மறைவால் வருத்தமடைகிறேன் – டிடிவி தினகரன்

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். தமிழகத்தில் மதம் சார்ந்த அரசியல் நிகழ்வுகளை கூர்மைப்படுத்திய தலைவராக விளங்கிய ராம கோபாலன, கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டுவந்த ராம கோபாலன் மறைவால் வருத்தமடைகிறேன் – டிடிவி தினகரன்

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர், பெரியவர் திரு.இராம கோபாலன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.