“பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய இரட்டைமலை சீனிவாசன்” டிடிவி தினகரன் ட்வீட் !

 

“பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய இரட்டைமலை சீனிவாசன்” டிடிவி தினகரன் ட்வீட் !

இரட்டைமலை சீனிவாசனின் 162வது பிறந்தநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

“பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய இரட்டைமலை சீனிவாசன்” டிடிவி தினகரன் ட்வீட் !

இரட்டைமலை சீனிவாசன் அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்கறிஞர் என பன்முக தன்மை கொண்டவர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் மாத இதழையும் நடத்தி வந்தார். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்த இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் ஜூலை 7, 1859 இல் பிறந்தார். கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர். இதையடுத்து இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். இதன் பின்னர் ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு,ஆலய நுழைவுத் தீர்மானம்,மது ஒழிப்புத் தீர்மானம் என பல தீர்மானங்கள் மூலம் பட்டியலின மக்களின் உயர்வுக்காக போராடியவர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பியவரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, எல்லோருக்கும் சமமாக பட்டியல் இன மக்களும் வாழ்வதற்கான தீர்மானங்களைக்கொண்டு வந்தவருமான திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளை அன்னாரது 162வது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். தமிழ்நாட்டில் அவர் முன்னெடுத்த சமூக சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள இந்நாளில் உறுதி ஏற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.