செல்லூர் ராஜூ அறிவிப்பால் வங்கிகளுக்குச் சென்று ஏமாறும் பொது மக்கள்! – டி.டி.வி.தினகரன் வேதனை

கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டை காட்டி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாக டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

Minister sellur raju
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் அறிக்கையில், “குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.


அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைககள் என்ன ? – என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

அந்தரங்க வீடியோக்கள் சார், என்னுடைய அந்தரங்க வீடியோக்களைக் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு செல்போன் ரீசாஜ் கடையில் வேலைப்பார்க்கும் சகாபுதீன் மிரட்டுகிறார் என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-வருண்குமாரிடம் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று பொறுமை தேவை !

இன்றைய ராசிபலன் 07-07-20220 (புதன்கிழமை) நல்லநேரம் காலை 9.15முதல் 10.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை மேஷம் இன்று உங்களுக்கு சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால்...

யார் பூனை, யாரு எலி என்பதை மத்திய பிரதேச மக்கள் முடிவு செய்வார்கள்…. கமல் நாத் ஆவேசம்

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் தார் மாவட்டம் பத்னாவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் மகாராஜா இல்லை,...

எல்லையில் பின்வாங்கும் சீன படைகள்.. நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று முன்தினம் முதல் சீன படைகள்...
Open

ttn

Close