“234 வேணாம் 100 போதும்” சொல்லுறத மட்டும் செய்யுங்க : தினகரனின் பக்கா ப்ளான்!!

 

“234 வேணாம் 100 போதும்” சொல்லுறத மட்டும் செய்யுங்க : தினகரனின் பக்கா ப்ளான்!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தனித்து விடப்பட்டது. சசிகலா விடுதலையாகி சென்னை வந்த நிலையில் அவருக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து கூறினார். இது அதிமுக தரப்பில் கடுப்பைக் கிளப்ப , எல்.கே.சுதீஷ் பேச்சும் கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியது எனலாம்.

“234 வேணாம் 100 போதும்” சொல்லுறத மட்டும் செய்யுங்க : தினகரனின் பக்கா ப்ளான்!!

இதனால் கடுப்பான அதிமுக தலைமை, தேமுதிகவை புறந்தள்ளியது. பாமகவுக்கு 23 சீட்டுகள், பாஜகவுக்கு 20 சீட்டுகள் அளித்து தேமுதிகவை வெறுப்பேற்றியது அதிமுக .இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது. அத்துடன் கே.பி முனுசாமி தலையீடு தான் இந்த அளவிற்கு எங்களை கொண்டு வந்து விட்டுள்ளது என்றும் அவர் பாமக ஸ்லீப்பர் செல் என்றும் குற்றம்சாட்டினர். அத்துடன் அரசியலில் ஜெயலலிதா போன்ற பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக கூறினார். அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

“234 வேணாம் 100 போதும்” சொல்லுறத மட்டும் செய்யுங்க : தினகரனின் பக்கா ப்ளான்!!

சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்த டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் முன்னிலையில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது வருகின்ற தேர்தலில் நமது இலக்கு 234 என்பதை விட 100 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அத்துடன் அதிமுக – அமமுக கட்சிகள் பெறும் வாக்குகள் அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்க வைக்க வேண்டும் என்றும் அந்த 100 தொகுதிகள் கொண்ட பட்டியலையும் தினகரன் அளித்துள்ளார். இது தேமுதிக தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாம். இதையடுத்து இந்த ஸ் தொகுதிகளில் இருகட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றதாம். தினகரனின் இந்த தேர்தல் வியூகம் எடுபடுமா? அல்லது அவருக்கே எதிராக திரும்புமா என்பது விரைவில் தெரியவரும்.