எல்லாம் பொய்.. திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்!

எல்லாம் பொய்.. திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்!

தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2ம் தேதி அடுத்த முதல்வர் யார்? எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது? என்பது தெரிய வந்துவிடும். ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

எல்லாம் பொய்.. திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்!

இந்த நிலையில், கரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ருசி கண்ட பூனைகள். இலவசங்களை அறிவித்து கஜானாவை காலி செய்து விட்டன. கரூரில் போட்டியிடும் செந்தில் பாலாஜி பஸ் மாறுவதை போல கட்சி மாறிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு முறை அவர் வெற்றி பெற்று விட்டார். எல்லா நேரமும் அதே நடக்காது என்று கடுமையாக விமர்சித்தார்.

எல்லாம் பொய்.. திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்!

தொடர்ந்து பேசிய தினகரன், மக்களுக்கு ரூ.1000, ரூ.1500 கொடுக்கும் திமுக மற்றும் அதிமுகவின் வாக்குறுதி எல்லாம் சாத்தியம் இல்லை. பணம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை. கடன் மட்டும் தான் உள்ளது. அரசிடம் நிதி இல்லாத போது எப்படி அவர்கள் அறிவித்ததையெல்லாம் செய்வார்கள். எல்லாம் பொய் வாக்குறுதிகள் என்றும் கூறினார்.