“தியாகத் தலைவி சின்னம்மா விடுதலையாகிறார்” – தேதி சொல்லும் டிடிவி தினகரன்

“தியாகத் தலைவி சின்னம்மா விடுதலையாகிறார்” – தேதி சொல்லும் டிடிவி தினகரன்

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தண்டனைக் காலம் முடிவடைந்து ஜன.27ஆம் தேதி விடுதலையாவார் என சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தீடிரென்று அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் சசிகலாவுக்கு தொற்று உறுதியானது. தற்போது அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

“தியாகத் தலைவி சின்னம்மா விடுதலையாகிறார்” – தேதி சொல்லும் டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரின் விடுதலை தேதி தள்ளிப்போகும் என்று தகவல் வெளியானது. அந்தத் தகவலை மறுக்கும் விதமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“தியாகத் தலைவி சின்னம்மா விடுதலையாகிறார்” – தேதி சொல்லும் டிடிவி தினகரன்

நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத் தலைவி சின்னம்மா நாளை மறுநாள் (27.01.2021) அன்று விடுதலையாகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.