ஹாட்ரிக் வெற்றியை நோக்கி விஜயபாஸ்கர்… டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்! #viralimalai

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி விஜயபாஸ்கர்… டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்! #viralimalai

விராலிமலை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதி. செல்வாக்கான நபர் என்பதால் தொடர்ந்து இருமுறை அவரை சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்து தொகுதி மக்கள் அழகு பார்த்துள்ளனர். இம்முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை 8 ஆயிரம் வாக்குகளில் தென்னலூர் பழனியப்பனை தோற்கடித்தார். அதே பழனியப்பனுடன் இம்முறை மோதினாலும். அவருக்கு வெற்றி என்பது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அமமுக அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதாலும், உட்கட்சி பூசலாலும் களத்தை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி விஜயபாஸ்கர்… டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்! #viralimalai

விஜயபாஸ்கருக்கு தொகுதி மக்கள் என்ன தீர்ப்பெழுத போகிறார்கள். வாருங்கள் பார்ப்போம். நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனநிலையை அறிந்து வருகிறது. அந்த வரிசையில் விராலிமலையில் கருத்துக்கணிப்பு மேற்கொண்டோம். விராலிமலை தொகுதியானது 2011ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி விஜயபாஸ்கர்… டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்! #viralimalai

இதுவரை இரு தேர்தல்களை மட்டுமே சந்தித்திருக்கிறது. 2011,2016 இரு தேர்தல்களிலும் விஜயபாஸ்கரை வெற்றிவாகை சூடியிருக்கிறார். பல முனை போட்டி இருந்தாலும் நேரடி போட்டி என்னவோ விஜயபாஸ்கருக்கும் பழனியப்பனுக்கும் தான். இருவரும் சென்டிமென்ட்களை அள்ளி வீசுகின்றனர். தொகுதி மக்கள் மனதில் யார் இருக்கிறார் என்ற ஆவலுடன் கேட்டோம். அவர்களின் பெரும்பாலோனோர் விஜயபாஸ்கருக்கே டிக் அடித்தனர். திமுகவுக்கே அங்கே சொற்ப எண்ணிக்கையில் தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் சீமானும் தினகரனும் இருக்கிறார்கள்.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி விஜயபாஸ்கர்… டஃப் கொடுக்கும் திமுக வேட்பாளர்! #viralimalai

விராலிமலையில் வளர்ச்சி இல்லை என்பதே மக்களின் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தொகுதிக்குள் கொண்டுவந்து முன்மாதிரியான தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. கருத்துக்கணிப்பின் முடிவில் விஜயபாஸ்கர் ஹாட்ரிக் வெற்றி அடிக்கக் கூடிய அத்துனை வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது. (கருத்துக்கணிப்பின் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்)