ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா கௌரவம் பெற்ற இயக்குனர் வெங்கட் பிரபு!
இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகம் தற்போது இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். இந்த கோல்டன் விசா அந்த நாட்டின் குடியுரிமை போன்றது. திரைத்துறையில் மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பத்து வருட காலத்தில் அவர்கள் ஐக்கிய அமீரகத்தில் வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான், மம்முட்,டி மோகன்லால், ஆஷாசரத் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
தமிழில் காஜல் அகர்வால், பார்த்திபன், லட்சுமி ராய், பிரனீதா, நாசர், விஜய் சேதுபதி, திரிஷா என பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. "அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றது பெருமையாக இருக்கிறது." என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியை கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.
வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது அவர் தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
It’s an honour to receive The UAE golden visa. Thanks a lot @Asifalishanid - founder & CEO, JBS group of companies,#LeapSportsRamesh#YesEventsVenkat#TokyoTamilSangamHari
— venkat prabhu (@vp_offl) June 13, 2022
For the great gesture and amazing hospitality pic.twitter.com/xSf7LWnKBn


