21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

 

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 8 I ஜனவரி 21, 2021 I வியாழக்கிழமை

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் பிற்பகல் வரை சுமாரான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். பணியில் உங்கள் திறமை வெளிப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். பணவரவும் எதிர்பாராத செலவும் ஏற்படலாம்.

ரிஷபம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

பரபரப்பான பதற்றமான தினமாக இருக்கும். அதீத பரபரப்பு காரணமாக வேலையில், முடிவெடுப்பதில் தவறுகள் நிழலாம். எனவே, பொறுமையுடனும் கவனத்துடனும் இன்றைய நாளை அணுக வேண்டும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளுடன் மனவருத்தம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதானத்தைக் கைவிட வேண்டாம். பண வரவு இல்லை என்றாலும் வீண் செலவும் இல்லை.

மிதுனம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மகிழ்ச்சியான சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் உங்கள் திறமை வெளிப்படும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். உடல் மற்றும் மனதளவில் புத்துணர்வை உணர்வீர்கள். வேலையில் வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதே நேரத்தில் பேசும் போது நிதானமாக யோசித்து பேசுவது நல்லது.

சிம்மம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் மிதமான பலன்கைளக் கொண்டிருக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இருப்பினும் செலவில் கவனம் தேவை.

கன்னி

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி கிட்டும். பிற்பகலுக்குப் பிறகு நிலை மாறும். மாலையில் குடும்பத்தில் நிம்மதி நிலவும். நிதி விவகாரத்தில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும்.

துலாம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிகள் நடக்கும். பொறுமையாகக் கையாண்டால் வெற்றி பெறலாம்.மகிழ்ச்சியுடன் வேலை செய்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் விட்டுக்கொடுத்தல் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருக்கும். செலவு கூடுதலாக இருக்கும். மாலையில் நண்பர்களால் ஆதாயம் ஏற்படலாம்.

விருச்சிகம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் எடுத்த காரத்தை முடிப்பீர்கள். ஆற்றலுடனும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையே அமைதி. பண வரவு மகிழ்ச்சியானதாக இருக்கும். தொழிலில் ஈடுபடுவோருக்கு லாபமும் பணியாளர்களால் செலவும் அதிகரிக்கும்.

தனுசு

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். கணவன் – மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். சேமிப்புக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. செலவு நீண்டுகொண்டே செல்லும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை இருக்கும்.

மகரம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

அதிர்ஷ்டமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் சிறு சிறு தடைகள் வந்தாலும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். வளைந்து கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி நிலவும். பண வருவாய் குறைவாக இருக்கும். வீண் செலவு காரணமாக கையிருப்பு கரையும்.

கும்பம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக அமையும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்வீர்கள். இன்றைய பொழுதை அமைதியாக கழிப்பதன் மூலம் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம். நிதிநிலைமை அபாரமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மீனம்

21-1-2021 தினப்பலன் – மிதுனம், கடகத்துக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்காது. பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். அதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவி டையே மோதல் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய தினம் இன்று.