28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

 

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 15 I ஞாயிற்றுக்கிழமை I மார்ச் 28, 2021

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கோபம், வருத்தம் போன்ற மன நிலையைத் துணைவரிடம் காட்டாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

ரிஷபம்

ஏற்றம் இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். வார்த்தைகளைக் கவனித்து பயன்படுத்தவும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். தவறுகள் நேரலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழுவதைத் தவிர்க்க நட்புடன் பழகுங்கள். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு ஏற்படும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் சிறப்பான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு திருப்தியான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் திருப்தியான உணர்வு நீடிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். சிலருக்கு ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

சிம்மம்

அமைதியைக் கடைபிடிப்பதன் மூலம் இன்றைய நாள் சிறப்பானதாக மாறும். வேலையில் கடினமான சூழல் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க முடியும். நிதானம் குறையும். எனவே, குடும்பத்தினர் மத்தியில் எரிச்சல் உணர்வைக் காட்ட வேண்டாம். மகிழ்ச்சியாக இருக்க நட்புடன் இருக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற செலவு அதிகரிக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

கன்னி

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். வேலையில் ஓரளவுக்கு ஆதாயமான சூழல் இருக்கும். சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

துலாம்

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம்தான். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

தனுசு

சற்று குழப்பமான நாளாக இருக்கும். மனதை ஆன்மிகம், பொழுதுபோக்கு போன்ற காரியங்களில் திருப்புவதன் மூலம் ஆறுதலைப் பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. இழப்புக்கான வாய்ப்புதான் உள்ளது.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

மகரம்

கடினமான நாளாக இருக்கும். ஆற்றல் இழந்தது போன்ற உணர்வு இருக்கும். சின்ன வேலை கூட மலை போலத் தெரியும். வேலையில் தடைகள், பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். கவனத்துடன் இருக்க வவ்ணடிய நாள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

கும்பம்

அனுகூலமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இன்றைய நாளைக் கழிப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைக்காகச் செலவு செய்வீர்கள்.

28-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு கொஞ்சம் சிரமமான நாளாகதான் இருக்கும்!

மீனம்

அதிர்ஷ்டமான நாளாக இன்றைய தினம் இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகளை பெறுவீர்கள். வேலையில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். லாபகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்.

toptamilnews.com