26-1-2021 இன்றைய ராசி பலன்!

 

26-1-2021 இன்றைய ராசி பலன்!

சார்வரி வருடம் I தை 13 I செவ்வாய் கிழமை I ஜனவரி 26, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

இன்றைய தினம் சவாலான சூழல் காணப்படும். கடினமாக உழைப்பை வெளிப்படுத் வேண்டி இருக்கும். இன்றைய தினம் முக்கிய முடிவகள் எதையும் எடுக்க வேண்டாம். பிற்பகலுக்குப் பிறகு வேலை, தொழில், வியாபாரத்தில் சாதகமான போக்கு ஏற்படும். பண வரவு குறைவு, செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். கணவன் – மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். வருவாய் குறைவாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

அவ்வளவு சாதகமான நாளாக இருக்காது. வேலை பளு அதிகரிக்கும். வேலையில் சிறு தவறுகள் நேரிடலாம் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிதானமாக இருப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதியை தக்க வைக்கலாம். அதிக செலவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

ஆக்கப்பூர்வ நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். பிற்பகலுக்குப் பிறகு நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு சற்று இருக்கும். ஆக்கப்பூர்வமான வழியில் செலவு செய்வீர்கள்.

சிம்மம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் உங்களுடன் அனுசரித்து நடந்துகொள்வார்கள். வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே திருப்தியான மனநிலை நிலவும். பண வரவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

கன்னி

26-1-2021 இன்றைய ராசி பலன்!

கவலை மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். பணியில் சிறு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். நான் என்ற உணர்வு காரணமாக இன்று வீண் செலவுகள் ஏற்படலாம். எனவே, நிதானமாக செய்படுவது நல்லது. கவலை அதிகரிக்கும் நாள் என்பதால் கடவுள் வழிபாடு, இசை போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

அனுகூலம் குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைத்தாலும் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பிரச்னை நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு குறையும். வீண் செலவு அதிகரிக்கும். எனவே, நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.

விருச்சிகம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காணப்படும். திட்டமிட்டதற்க முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு இருக்கும்.

தனுசு

26-1-2021 இன்றைய ராசி பலன்!

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உயர் அதிகாரியின் அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். நல்லிணக்கம் மேம்படும். நிதி வருவாய் சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

காரியங்கள் வெற்றி பெறும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவி இடையே சூடான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைபளு அதிகரிக்கும். நிதி விவகாரம் சிறப்பாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

கும்பம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

அனுகூலமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வளர்ச்சியை தக்க வைக்க விழிப்புணர்வுடன் நடப்பது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். நிதி நிலையில் முன்னேற்றம் இல்லை. அதே நேரத்தில் வீண் செலவு அதிகரிக்கலாம்.

மீனம்

26-1-2021 இன்றைய ராசி பலன்!

உங்கள் மனதில் தைரியம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுத்தால் பயனுள்ள முடிவுகளைக் காண முடியும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி வருவய் சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.