15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

 

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 1 I சனிக்கிழமை I மே 15, 2021

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்றைய தினம் சிறந்த நாளாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நல்ல செய்திகள் இன்றைய நாள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. வொர்க் ஃப்ரம் ஹோம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலையில் சிறப்பான சூழல் இருக்காது. உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே அமைதி நிலவ உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மிதுனம்

கடினமான நாளாக இருக்கும். பொறுப்பு, வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் நிதானத்துடன் கையாண்டால் வெற்றி பெறலாம். வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் எழலாம். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. தேவை அதிகரிக்கும்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கடகம்

சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இன்றைய நாளில் செயல்படுவீர்கள். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வேலையில் சுமுகமான சூழல் காணப்படும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். விருப்பம் போல செயல்படுவீர்கள்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

சிம்மம்

கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்பட வேண்டிய காலகட்டம் இது. நண்பர்களின் உதவிகள் கிட்டும். வேலைச் சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். இதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு எழலாம். செலவு அதிகரிக்கும். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். அதிக சவால்களைச் சந்தித்தாலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்துத் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் உள்ளது. புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு காணப்படும். வரவு செலவு இரண்டுக்கும் சம வாய்ப்புள்ளது.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். மன அழுத்தம், மனப் பதற்றம், குழப்பம் அதிகரிக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவலாம். எனவே, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் விரைவாக பணியை முடிப்பீர்கள். எப்போதும் வேலை விஷயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்கவும் முயற்சி செய்யுங்கள். இன்று செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் அதை எளிதாக சமாளிப்பீர்கள்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மகரம்

இன்றைய நாள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும். வீண் மனக் குழப்பம் காரணமாக வேலையில் சிறு தவறுகள் நேரலாம். எனவே, அதீத கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகளும் அதிகரிக்கும்.

15-5-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மீனம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்களுடனான நட்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

toptamilnews.com