12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

 

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

சார்வரி வருடம் I மார்கழி 28 I செவ்வாய் கிழமை I ஜனவரி 12, 2021

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

இன்றைய ராசி பலன்!

மேஷம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

சலனமில்லாத நாளாக இன்றைய நாள் இருக்கும். பெரிய உற்சாகமோ அல்லது பிரச்னையோ இல்லாமல் மிதமாக வாழ்க்கை செல்லும். மனக் குழப்பம் ஏற்படலாம். மனதை ஒருமுகப்படுத்த இறைவழிபாட்டில் ஈடுபடலாம். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பணியை ஒதுக்க கூடுதலாக நேரம் செலவிட வேண்டியிருக்கும். விட்டுக்கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம்.

ரிஷபம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் நேரம் செலவிடுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்றைய தினம் உங்களுக்கானது… அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மிதுனம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

உங்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் திறமைகளுக்கு உரிய மரியாதை, பாராட்டு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். துணையிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். வளமான நாட்களாக இன்றைய தினம் அமையும்.

கடகம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

வெற்றிகரமான நாளாக அமையும். மன உறுதி அதிகரிக்கும். ஆற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மிளிரும். குடும்பத்தில் அமைதி நிலவும். துணைவரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சிக்கனமாகச் செயல்படுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

சிம்மம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

சிக்கல்கள் வந்து விலகும் நாளாக இன்றைய தினம் அமையும். தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும்போது வெற்றி கிட்டும். பணியில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேலையில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். துணைவருடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.

கன்னி

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இன்றைய தினம் அமையும். ஓரளவுக்கு உற்சாகம் இருக்கும். வேலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பு ஏற்ற அங்கீகாரம் இருக்காது. குடும்பத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கைக் கைவிட்டால் மகிழ்ச்சி நிலவும். வீண் வாக்குவாதம் வேண்டாம், விட்டுக் கொடுத்தால் பலன்கள் அதிகம். பண வரவு இருக்கும். அதே நேரத்தில் செலவும் உண்டு.

துலாம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

அனுகூலமான தினம் இன்று. மகிழ்ச்சி மேலிடும். உறவினர்கள், நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாள். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்கலாம். வேலையில் புத்துணர்வோடு ஈடுபட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு.

விருச்சிகம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

இன்றைய நாள் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறாமல் எரிச்சல் அதிகரிக்கும். பாதுகாப்பின்மை உணர்வீர்கள். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வதன் மூலம் பிரச்னைகளை சமாளிக்கலாம். அதிகப்படியான மன உணர்வுகளைத் துணைவரிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் சண்டை ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று.

தனுசு

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய தினம் இன்று. வேலைகள் அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். அதிக மன அழுத்தம் காரணமாக குடும்பத்தில் சச்சரவு எழலாம். துணைவருடன் மகிழ்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது. பணப் புழக்கம் இருக்காது. கடன் அதிகரிக்கும். நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

தன்னம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். இன்று அதிர்ஷ்டம் கை கொடுக்காது. வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்றுங்கள். துணைவருடன் நல்லுறவு குறையும். விட்டுக்கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

கும்பம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்றைய தினத்தை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மீனம்

12-1-2021 தினப்பலன்: மிதுனத்துக்கு வாய்ப்பு நிறைந்த நாளாக அமையும்… மற்றவர்களுக்கு?

மிதமான பலன்களை அளிக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் குறைகள் இருக்கும். வேலையில் தவறுகள் நடக்கலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அன்பான உணர்வு குறைந்து காணப்படும். வரவு இல்லை ஆனால் செலவு அதிகமாக இருக்கும். வீண் பயம், பதற்றம் ஏற்படும். இவற்றைத் தடுக்க தியானம் செய்வது நல்லது.