11-6-2021 – இன்றைய ராசி பலன்!

 

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

பிலவ வருடம் I வைகாசி 28 I வெள்ளிக்கிழமை I ஜூன் 11, 2021

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

இன்றைய ராசிபலன்

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். அணுகுமுறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமானதாக மாற்றலாம். வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்துக்குள் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணம் இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

மிதுனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். பணம் இழப்புக்கு வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

கடகம்

உற்சாகம் குறைந்த நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்துக் கொள்வது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே மோதல் போக்கு ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நிதிநிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

சிம்மம்

உங்கள் முயற்சிகளின் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் நன்கு யோசித்து செயல்படுவது நல்லது. வேலையில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதியான சூழல் நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு செலவுகள் செய்வீர்கள்.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

கன்னி

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பணத்தேவை அதிகரிக்கும். பணவரவுக்கு சிறிது அளவுக்கு வாய்ப்பு உள்ளது.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் நாட்டம் குறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நிதிநிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறையும்.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

விருச்சிகம்

நற்பலன்கள் குறைந்த நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலைப்பளு அதிகரிக்கும். இது கவலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். குடும்பத்தில் இறுக்கமான சூழல் காணப்படும் கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் பணம் இறப்புக்கு வாய்ப்பு உள்ளது.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

தனுசு

ஓரளவுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையில் உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

மகரம்

சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரியும் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணவரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் திருப்திகரமான நாளாக இருக்கும்.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். மனதை பொழுதுபோக்கில் ஈடுபடுத்துவது ஓரளவுக்கு நிம்மதியைத் தரும். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு காணப்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பணம் இழப்பு காண வாய்ப்பு உள்ளது. செலவுகளில் கூடுதல் கவனம் தேவை.

11-6-2021  – இன்றைய ராசி பலன்!

மீனம்

வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். சவால்கள் பலவற்றை சந்திக்க வேண்டிய இருக்கும். மனதில் அமைதியின்மை, பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வேலையில் தடைகள் காணப்படும். வேலைப் பளு அதிகரிப்பதால் வீண் குழப்பம் மனச்சோர்வு ஏற்படும். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும்.