1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

 

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

சார்வரி வருடம் I மாசி 17 I திங்கட்கிழமை I மார்ச் 1, 2021

இன்றைய ராசி பலன்!

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

மேஷம்

உற்சாகமான நாளாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம்

ஓரளவுக்குச் சாதகமான நாளாக இருக்கும். காரியத்தில் தடைகள் வரலாம். எனவே, எந்த ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பும் யோசித்து, திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. வேலையில் தொந்தரவுகள் வந்து சேரும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

மிதுனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். விரும்பத்தகாத சூழல்கள் நிலவும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை, பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் வெறுமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே விருப்பத்தகாத சூழல் இருக்கும். பண வரத்து ஓரளவுக்கு இருக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

கடகம்

ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். வேலையில் முன்னேற்றமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

சிம்மம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். இன்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பணிச் சுமையை எதிர்கொள்ள முடியும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் பண இழப்பு ஏற்படலாம்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

கன்னி

உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் இன்றைய தினத்தை வெற்றிகரமானதாக மாற்ற முடியும். மன அழுத்தம் அதிகரிக்கும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். நம்பிக்கை இன்மை ஏற்படும். அதுவே இன்றைய நாளில் உங்களின் வெற்றியைப் பறிக்கலாம். எனவே, மனதில் நம்பிக்கை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையில் ஏமாற்றமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். துணைவரிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். செலவு அதிகரிக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உற்சாகம் பொங்கும். வேலை, தொழிலில் அனுகூலமான போக்கு காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பண வரவு இருக்காது. செலவு கட்டுக்குள் இருக்கும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

தனுசு

சுமுகமான நாளாக இருக்கும். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். வேலை, தொழிலில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

மகரம்

ஓரளவுக்கு இனிய நாளாகவே இருக்கும். மனதில் அமைதி குறையும். அமைதியை கடைபிடிப்பதன் மூலம் இன்றைய நாள் சாதகமாக மாறும். மனக் கவலை காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். வார்த்தைகளைக் கவனமாக கையாளுங்கள். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு ஏற்படும். வீண் பண இழப்பைத் தவிர்க்கக் கூடுதல் கவனம் தேவை.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

கும்பம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உறுதியாக இருப்பதன் மூலம் நல்ல பலன்களை அடையலாம். மனக் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் பிரச்னை எழும். வாக்குவாதம் தவிர்க்க அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது.

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

மீனம்

நன்மைகள் நிறைந்த தினமாக இன்றைய நாள் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமான போக்கு காணப்படும். சுறுசுறுப்பாக ஈடுபட்டு குறித்த நேரத்துக்கு முன்னதாக அனைத்தையும் முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.