3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

 

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 21 I புதன்கிழமை I பிப்ரவரி 3, 2021

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும். உழைப்பின் மூலம் உயர்வை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சரியான வழியில் செலவு செய்வீர்கள், சேர்த்தும் வைப்பீர்கள்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

மனக் குழப்பம் மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். பயம், பதற்றம், பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியத்தை வளர்ப்பதன் மூலம் இந்த பிரச்னையை எதிர்கொள்ளலாம். வேலையில் தடைகள் வந்து சேரும். பணியை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

கடகம்

மனதில் உத்வேகம் அதிகரிக்கும். அதன் காரணமாக விரைந்து செயல்படுவீர்கள். மனம் தெளிவாக இருக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையை புதிய ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற மரியாதை அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.  உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

கன்னி

குழப்பம், சோர்வு மிக்க நாளாக இருக்கும். எனவே, இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். இதனால், உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். கணவன் மனைவி இடையே குழப்பமான மனநிலை ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. சேமிப்பு கரையும். இதனால் கவலை அதிகரிக்கும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

துலாம்

கடுமையான உழைப்பை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். மனதில் அமைதி குறையும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் கவனச் சிதறல் ஏற்படும். உடன் வேலை பார்ப்பவர்களுடன் கவனமாக இருப்பது நல்லது. துணைவரிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள். இருப்பினும், கணவன் – மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமித்து செலவழிக்க வழி காண்பது நல்லது.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

எதிர்பாராத சில சம்பவங்கள் நடைபெறலாம். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது எது வந்தாலும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை, தொழிலில் தடைகள் ஏற்படலாம். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். கணன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

தனுசு

முயன்றால் வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவு செய்யும் போது கவனம் தேவை.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

மகரம்

கடினமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தைரியம், அமைதி குறையும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் வரலாம். வேலையில் சிறு சிறு தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் – மனைவி இடையே இடைவெளி அதிகரித்த உணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. உங்களையும் அறியாமல் வீண் செலவு நிகழ வாய்ப்புள்ளது. கூடுதல் கவனம் தேவை.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

கும்பம்

தடைகளும் தாமதங்களும் நிறைந்த நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகம் இல்லை. வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். கணவன் மனைவி இடையே மோதல் நிகழலாம். இதனால் மனம் அமைதியின்றி தவிக்கும். பண வரவுக்கு வாய்ப்பில்லை. செலவு அதிகரிக்கும்.

3-2-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு உற்சாகமான, உத்வேகமான நாளாக இருக்கும்!

மீனம்

வளர்ச்சியான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.