30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

 

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

பிலவ வருடம் I சித்திரை 16 I வெள்ளிக்கிழமை I ஏப்ரல் 30, 2021

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

30-4-2021 இன்றைய ராசி பலன்!

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

மேஷம்

நீங்கள் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சொத்து பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். சவாலான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களை தேடிவரும். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களால் பிரச்னை ஏற்படும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

ரிஷபம்

இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நண்பர்களை சம்பாதிப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. உத்தியோகத்தில் இருக்கும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வீண் அலைச்சலால் அசதி ஏற்படும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

மிதுனம்

கவலைகள் நீங்கி, புத்துணர்வு ஏற்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை நீங்கும். பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய வேண்டிவரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குவரும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ பணிகளில் பங்கேற்பீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

கடகம்

மனக்குழப்பங்கள் நீங்கி நல்ல முடிவு எடுப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தந்தை, தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சுப செய்தி வந்துசேரும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

சிம்மம்

சுபகாரியங்களில் இருந்துவந்த தடை நீங்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளவும். ஆடை, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கவனம் தேவை. உடன் பணிப்புரிபவர்களால் செலவு ஏற்படும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

கன்னி

சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. சகோதரர்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

துலாம்

இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உதவி செய்யப்போய் மாட்டிக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உங்களை பற்றி சில வதந்திகள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

விருச்சிகம்

குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பூர்கள். பழைய கசப்பான விஷயங்களை பற்றி இன்று பேசவேண்டாம். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். செலவுகள் சற்று அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் பணவரவு உண்டாகும்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

தனுசு

நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான நாள். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தன்னம்பிக்கையோடு பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ஆஞ்சிநேயருடைய வழிபாட்டால் நலம் காணும் நாள்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

மகரம்

மனதுக்கு பிடித்தவர்களை மணம் முடிக்கக்கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மறையும். பணவரத்து அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மற்றவர்களோடு பேசும்போது பொறுமையை கையாளுங்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

கும்பம்

இன்றைய நாள் வாகன பயணங்களில் கவனம் தேவை. நிதானமாக செயல்படவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்களுடைய கவுரவம் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூலாக்கும். எதிர்பார்த்த வேலை தடையின்றி கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். அரசாங்க காரியங்களில் இழுபறி ஏற்படவாய்ப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

30-4-2021 தினப்பலன் – தொட்டது துலங்கும் நாள்!

மீனம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படக்கூடும். மற்றவர்களை நம்பாமல் சுய முடிவு எடுக்கவும். உறவினர்களால் சில பிரச்னை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.