எல்லாரும் பார்க்கலாம்... ஆர்ஜே பாலாஜியின் 'வீட்ல விஷேசம்' பட சென்சார் அப்டேட்!

 
எல்லாரும் பார்க்கலாம்... ஆர்ஜே பாலாஜியின் 'வீட்ல விஷேசம்' பட சென்சார் அப்டேட்! எல்லாரும் பார்க்கலாம்... ஆர்ஜே பாலாஜியின் 'வீட்ல விஷேசம்' பட சென்சார் அப்டேட்!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீட்ல விஷேசம் படத்திற்கு தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஆர்ஜேவாக தன் பயணத்தைத் துவங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார். அவர் கடைசியாக நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

அவர் தற்போது ‘வீட்ல விஷேசம்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். என்ஜே சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் இந்தப் படம். சத்யராஜ் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நடித்துள்ளார். நடிகை ஊர்வசி அம்மாவாக நடித்துள்ளார். போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

எல்லாரும் பார்க்கலாம்... ஆர்ஜே பாலாஜியின் 'வீட்ல விஷேசம்' பட சென்சார் அப்டேட்!

வரும் ஜூன் 17-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம். 

வீட்ல விசேஷம் படக்குழுவினர் புதுமையான பல முறைகளில் படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. எனவே இந்தப் படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காண்பித்து வருகின்றனர்.