விரைவில் முடிக்கப்படும் 'பூவே உனக்காக' சீரியல்... எதனால் தெரியுமா ?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பூவே உனக்காக' சீரியல் திடீரென முடிக்கப்பட உள்ளது.
சன் டிவியில் ரசிகர்கள் வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் 'பூவே உனக்காக'. விஜய்யின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பில் உருவான இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சில எபிசோடுகள் இந்த சீரியல் ஒளிப்பரப்பானதற்கு பிறகு இந்த சீரியல் ஹீரோ மற்றும் ஹீரோயின் விலகினார்.

இரவு 8 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் அதன்பிறகு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த சீரியலில் அஸிம் மற்றும் சாயாசிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சீரியலின் க்ளைமேக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது.
இந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்ட காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் மற்றும் நடிகைளுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் நடிகர்களுக்கு தெரியாமலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாம். தயாரிப்பு நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதே சீரியல் முடிக்கப்பட்டதற்கு காரணம் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.


