ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

 

ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

அமெரிக்காவில் நாளை மறுநாள் (நவம்பர் 3) அதிபருக்கான தேர்தல் நடக்க விருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. கொரோனா உச்சத்தில் இருக்கும் நாடு. அதனால், தேர்தல் நடக்குமா… நடக்காதா என்ற குழப்பம் இருந்த நிலையில் அது ஒருபக்கம், இது ஒரு பக்கம் என ஜோராக வேலைகள் நடக்கின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் vs ஜோ பைடன் இருவரும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான 10 விஷயங்களைப் பார்ப்போம்.

ஒன்று: அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப்க்கு பெரும் தலைவலியே கோவிட் 19 நோய் பரவல் குறித்து விமர்சனம்தான். ஜோ பைடன், டெட்ராய்ட் நகரில் பிரசாரத்தில் மேற்கொண்டபோது “அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்களுக்கு அதிபர் ட்ரம்பே காரணம்” என்று கடும் குற்றச்சாட்டை வீசினார்.

ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

இரண்டு: ட்ரம்ப் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “ஜோ பைடன் வெற்றி பெற்றால், சீனாவே வெற்றி பெற்றதற்கு சமம். ஜோ பைடனில் அரசியல் பணிகளில் நம் நாட்டு (அமெரிக்கா) வேலை வாய்ப்பை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்கவே வேலை செய்தார்’ என்றார்.

மூன்று : ஜோ பைடன், “ட்ரம்ப் தனது ஆட்சி காலத்தில் அமெரிக்கா எதிர்கொண்ட ஒரு சிக்கலிலும் முழுமையான வெற்றியை அடைந்தது இல்லை. அதற்கு சரியான உதாரணம் கொரோனாவை அவர் கையாண்டது” என்றார்.

நான்கு: ட்ரம்ப் விஸ்கான்ஸின் மாகாண பிரசாரத்தில் பேசும்போது, “ஜோ பைடன் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லாதவர்கள். அவர் மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளிக்கிறார். ஜோ பைடன் அதிபராகி விட்டால் நாட்டில் வரிகளை மிக அதிகமாக உயர்த்திவிடுவார்” என்றார்.

ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

ஐந்து: ட்ரம்ப் பற்றிய அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், பேசிய ஜோ பைடன், சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டினார். சீனாவுடன் ஜோ பைடனைத் தொடர்பு படுத்தி பேசி வந்த சூழலில் இது அதிர்ச்சியை அளித்தது.

ஆறு: ட்ரம்ப் தனது பேச்சில் ஒருமுறை, ”வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார். வடகொரிய விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம் என்றார். ஒபாமாவும் ஜோ பைடனும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஏழு: ட்ரம்ப் தனது பிரசாரம் ஒன்றில், ”அமெரிக்க தேர்தல் முறையைப் பற்றி எதிரணியினர் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை எதிரணி வெல்ல வேண்டும் எனில் கள்ள ஓட்டுகளால் மட்டுமே முடியும். ஆனால், நாம்தான் நிச்சயம் வெற்றிபெறுவோம்” என்றார்.

ட்ரம்ப் vs ஜோ பைடன் : காரசாரமான 10 வாதங்கள் – அமெரிக்கத் தேர்தல் 2020

 எட்டு: ட்ரம்புடன் நேரடி விவாதத்தில் ”தான் அதிபரானால் காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான செயற்பாடாக பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்”என்றார் ஜோ பிடன்.

ஒன்பது: ஜோ பைடன் பேசுகையில், “ட்ரம்பின் தவறுகளால் 2 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்தார்கள். ட்ரம்ப் குடும்பத்தினர்களின் ஊழல்களைப் பற்ற்ப் பேசினால் இந்த இரவு முழுக்க பேசலாம்” என்றார்.

பத்து: இதற்கெல்லாம் உச்சமாய் ட்ரம்ப் பிரசாரத்தில் ஒருமுறை,  “ஜோ பைடன் ஒருவேளை வென்று அதிபராகி விட்டால், நான் நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது” என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.