“மேயர் ஒரு முட்டாள்” -கழக பேச்சாளர் போல தரை லோக்கலாக பேசிய ட்ரம்ப் ..

 

“மேயர் ஒரு முட்டாள்” -கழக பேச்சாளர் போல தரை லோக்கலாக பேசிய  ட்ரம்ப் ..

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில், அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கள் பலரின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது .

“மேயர் ஒரு முட்டாள்” -கழக பேச்சாளர் போல தரை லோக்கலாக பேசிய  ட்ரம்ப் ..

குடியரசு கட்சி சார்பாக மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்பை ஆதரித்து அவரின் கட்சிக்காரர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வாஷிங்டனிலிருந்து போர்ட்லாண்டிற்கு ஊர்வலமாக சென்றார்கள் .பிறகு போர்ட்லாண்டில் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது , நடந்த கலவரத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் .இந்த சம்பவத்தை கண்டித்து ட்ரம்ப் அந்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, இப்படி கலவரத்தினை தூண்டிவிட்டு அதை வேடிக்கைப்பார்க்கும் இந்த போர்ட்லேண்ட் மேயர் ஒரு முட்டாள் என்று ஒருமையில் பேசி, அவரை கடுமையாக திட்டியுள்ளார் ,
இது அவரின் அதிபர் பதவிக்கு அழகல்ல என்றும், இப்படி ஒரு லோக்கல் பேச்சாளர் போல ட்ரம்ப் பேசுவது அவரின் பதவியை அசிங்கப்படுத்துவது போல உள்ளது என்றும் போர்ட்லேண்ட் மேயர் ஒரு தொலைகாட்சியில் தோன்றி பேட்டி கொடுத்தார் .
சமீப காலமாக ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பயத்திலிருப்பதால் இப்படி எதிர்க்கட்சிகளை கடுமையாகி பேசி வருகிறார் என்று அந்த நாட்டு அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் .இப்படி அவர் தொடர்ந்து பேசினால் நிறைய வாக்குகளை அவர் இழக்க நேரிடுமென்றும் அவர்கள் கூறினார்கள்

“மேயர் ஒரு முட்டாள்” -கழக பேச்சாளர் போல தரை லோக்கலாக பேசிய  ட்ரம்ப் ..