ட்ரம்ப் டிஸ்சார்ஜ் – மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

 

ட்ரம்ப் டிஸ்சார்ஜ் – மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடந்துவருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அங்கு தேர்தல். அதனால், பல இடங்களில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிபர் ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

ட்ரம்ப் டிஸ்சார்ஜ் – மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர். அதனால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

ட்ரம்ப் டிஸ்சார்ஜ் – மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாகி உள்ளார். இது குறித்து அவரே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இங்கிருந்த நாட்களில் கொரோனா நோய் குறித்து நன்கு தெரிந்துகொண்டேன். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி’ என்பதாகப் பேசியுள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1312864232711520257

டிஸ்சார்ஜ் ஆனாலும், இன்னு ஒரு வாரத்திற்கு நேரடியாகத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர மாட்டார் என்றே தெரிகிறது.