சொந்த ஊருக்குப் போக வேண்டி லிப்ட் கேட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் !

 

சொந்த ஊருக்குப் போக வேண்டி லிப்ட் கேட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் !

லாரி டிரைவர் ஒருவர் புலம்பெயர்ந்து கொண்டிருந்த தம்பதியரின் மூன்று குழந்தைகளை கடத்தி, அவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நடந்துள்ளது.

இந்தக் குடும்பம் டெஹ்ராடூனில் பணிபுரிந்து வரும், உத்தரபிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் உமேஷ் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹரித்வாரை அடைந்த குடும்பம் அங்கிருந்து செல்ல ஏதாவது வாகனத்தில் லிப்ட் கிடைக்குமா என்று காத்திருந்தனர். இரவு 10 மணியளவில், ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி அவர்களுக்கு லிப்ட் கொடுக்க ஒப்புக்கொண்டார். சிறிதும் யோசனை இல்லாமல், குடும்பத்தினர் லாரியில் ஏறி பயணம் செய்துள்ளனர்.

சொந்த ஊருக்குப் போக வேண்டி லிப்ட் கேட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் !

லாரி பிஜ்னோரில் உள்ள தம்பூர் நகரத்தை அடைந்தபோது, ​​லாரி ஓட்டுநர் புலம்பெயர்ந்த தம்பதியினரிடம் போலீஸ் செக்போஸ்ட்டை சுட்டிக்காட்டி கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
போலீசிடம் பிடிபட்டால் உங்களை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்று பயமுறுத்தியுள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் ஏறிக்கொள்ளம் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய குடும்பம் லாரியிலிருந்து இறங்கியுள்ளனர் . அந்த நேரத்தில் லாரி டிரைவர் தம்பதியின் மூன்று பெண் குழந்தைகளுடன் லாரியில் தப்பிச் சென்றுள்ளார்.

ஷெர்கோட் என்ற பகுதிக்கு அருகே, லாரி டிரைவர் 15 வயது சிறுமியை லாரியில் இருந்து வெளியே இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியை பெற்றோர் சிறுமிக்கு போன் செய்த பின்னர் நடந்த சம்பவம் குறித்து அறிந்துகொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தம்பதியினர் தம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தனர். பின்னர் காவல்துறையினர் அந்த லாரி டிரைவரைக் கைது செய்து மூன்று குழந்தைகளையும் மீட்டனர். சிறுமிகளுக்கு பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.