ட்ரையம்ப் டைகர் 900 பைக் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

ட்ரையம்ப் டைகர் 900 பைக் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பொன்னேவில்லி டி 100 பிளாக் & டி 120 பிளாக் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் நாட்டில் மற்றொரு புதிய பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி ஜூன் 19 அன்று இந்தியாவில் புதிய டைகர் 900 மிடில்வெயிட் அட்வென்சர் பைக் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் மாடல் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவலால் இந்த பைக்கின் வெளியீடு தாமதமானது. டிஜிட்டல் முறையில் இந்த வெளியீடு நடைபெற உள்ளது. இந்த பைக்கை ப்ரீ-புக்கிங் செய்ய ரூ.50 ஆயிரம் செலுத்தி டோக்கன் வாங்க வேண்டும்.

ட்ரையம்ப் டைகர் 900 பைக் வெளியீட்டு தேதி அறிவிப்பு

டைகர் 800 பைக்குடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் டைகர் 900 மாடலில் கணிசமாக புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட உள்ளன. புதிய டைகர் 900 பைக்கின் வடிவமைப்பு, என்ஜின் செயல்திறன், சில அம்சங்கள் என பலவற்றில் கணிசமான அப்டேட் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய டைகர் 900 அட்வென்சர் மோட்டார் சைக்கிள் ஜிடி, ரேலி மற்றும் ரேலி ப்ரோ ஆகிய மூன்று வேரியன்ட்களில் வெளியாக உள்ளது.

இந்த பைக் மாடலில் 799 சிசி முதல் 888 சிசி வரை என்ஜின் இடம்பெறும். என்ஜின் எடையை 2.5 கிலோ அளவுக்கு குறைக்க டிரிபிள் கிரான்ஸ்காஃப்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7,250 ஆர்பிஎம்மில் 87 என்.எம் டார்க் விசையை இந்த பைக் மாடல் உருவாக்கும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற அம்சங்களிலும் பைக்கில் புதிய அப்டேட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. டைகர் 900 ஜிடி விலை சுமார் ரூ.12 லட்சம் மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ விலை ரூ.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.