கொரோனா நோயாளிகளை மனதளவில் வலுவாக வைத்திருக்க விவேகானந்தர் புத்தகங்கள் வழங்கும் திரிபுரா அரசு

கொரோனா நோயாளிகளை மனதளவில் வலுவாக வைத்திருக்க விவேகானந்தர் புத்தகங்கள் வழங்கும் திரிபுரா அரசு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை போல் திரிபுராவிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மனரீதியாக உறுதியாகவும், உந்துதலாகவும் வைத்திருக்க சுவாமி விவேகானந்தர் புத்தகங்களை அம்மாநில அரசு வழங்க தொடங்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளை மனதளவில் வலுவாக வைத்திருக்க விவேகானந்தர் புத்தகங்கள் வழங்கும் திரிபுரா அரசு
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்

அகர்தலாவில் முதல்வர் பிப்லாப் குமார் தேப், சுவாமி விவேகானந்தர் எழுதிய சில புத்தகங்களை திரிபுரா மருத்துவ கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார். முதல்வர் பிப்லாப் குமார் தேப் இது குறித்து கூறுகையில், கோவிட்-19 நோயாளிகளை உந்துதலாகவும், மனரீதியாக வலுவாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நோயாளிகளுக்கும் சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனால் அவர்கள் அந்த புத்தகத்தை படிக்க முடியும், அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்படுவார்கள். கொரோனா எதிராக நாம் போராடும் வேளையில் அமைதியாகவும், ஆற்றலுடன் இருப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளை மனதளவில் வலுவாக வைத்திருக்க விவேகானந்தர் புத்தகங்கள் வழங்கும் திரிபுரா அரசு
கொரோானா வைரஸ் பரிசோதனை

திரிபுரா மாநிலத்தில் இதுவரை (நேற்று காலை நிலவரப்படி) மொத்தம் 9,213 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,574 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 83 பேர் இந்த தொற்று நோய்க்கு பலியாகி உள்ளனர் மற்றும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.