ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் லண்டனில் இருக்கு… மீண்டும் பல்பு வாங்கிய திரிபுரா பா.ஜ.க. முதல்வர்..

 

ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் லண்டனில் இருக்கு… மீண்டும் பல்பு வாங்கிய திரிபுரா பா.ஜ.க. முதல்வர்..

அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகமான ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் உள்ளதாக திரிபுரா பா.ஜ.க. முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பிப்லாப் குமார் தேப் அதிரடியாக கருத்துக்களுக்கு சொந்தக்காரர். அதேசமயம் அவர் சீரியசாக சொல்லும் பல கருத்துக்கள் நாம் நம்பலை அறியாமல் சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் பிப்லாப் குமார் தேப் பேசுகையில், நேபாளம் மற்றும் இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் முன்பு கட்சியின் தேசிய தலைவராக இருந்தபோது என்னிடம் தெரிவித்தார் என்று ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் லண்டனில் இருக்கு… மீண்டும் பல்பு வாங்கிய திரிபுரா பா.ஜ.க. முதல்வர்..
பா.ஜ.க.

பிப்லாப் குமார் தேப் இப்படி சொன்னது இணையதளங்களில் வைரலானது. நேபாளமும், இலங்கையும் பொங்கி எழுந்தன. இந்த விவகாரம் முடிவதற்குள் தற்போது மற்றொரு தவறான தகவலை கூறி பிப்லாப் குமார் தேப் பல்பு வாங்கியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று திரிபுரா சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிப்லாப் குமார் தேப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: ஒரு நகரம் அல்லது இடம் இதன் பல்கலைக்கழகத்தால் பிரபலமடையலாம்.

ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் லண்டனில் இருக்கு… மீண்டும் பல்பு வாங்கிய திரிபுரா பா.ஜ.க. முதல்வர்..
ஹார்வர்டு பல்கலைக்கழகம்

இங்கிலாந்து அல்லது லண்டனை பற்றி நாம் சிந்திக்கும்போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ளது பெரும்பான்மையான மக்களுக்கு தெரியும். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் பிப்லாப் குமார் தேப் அந்த பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் இருப்பதாக கூறியது பெரும் கிண்டல் கலந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்த கூட்டத்தில் பிப்லாப் குமார் தேப், ஹார்வர்டு என்ற வார்த்தை கவர்ட் என்று உச்சரித்ததும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்லாப் குமார் தேப் தவறான தகவல்களை கூறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், அமேசான் காடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் அமேசான் காடுகள் பிரேசில் அமைந்துள்ளது. மேலும் கொலம்பியா, பெரு மற்றும் இதர அமெரிக்கா நாடுகளிலும் அது பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.