நாடு முழுவதும் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்

நாடு முழுவதும் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் மும்மொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை, இந்தியாவில் கல்வி புரட்சியை ஏற்படுத்தும் என்றும் 2030ல் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை கொண்டு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் இந்த கல்விக் கொள்கை, சிறந்த மாணவர்களை உருவாக்கும் கூறி வருகிறது. ஆனால், இந்த புதியக் கல்விக் கொள்கை மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

நாடு முழுவதும் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்

அண்மையில் இது குறித்து பேசிய முதல்வர், தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கை தான் தொடரும் என கூறினார். அதே போல எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல.. இந்தி திணிப்புக்கு தான் எதிரி என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மும்மொழி கொள்கை பற்றி கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழி கல்வி பின்பற்றப்படும் என்றும் மூன்றாவது மொழியை மாநில அரசுகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.