திருச்சி- கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை கடைபிடிப்பு? – குற்றச்சாட்டு

திருச்சி- கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை கடைபிடிப்பு? – குற்றச்சாட்டு

திருச்சி

கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தலித் கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்த

திருச்சி- கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை கடைபிடிப்பு? – குற்றச்சாட்டு

அமைப்பின் நிர்வாகி சார்லஸ், தற்போது தமிழகத்தில் 5 மறை மாவட்டத்தில் 6 ஆயர்கள் மற்றும் 2 பேராயர் பதவிக்கான நியமனத்தில் சாதீய தீண்டாமையுடன் செயல்பட்டு தலித் குருமார்கள் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இன்று திருச்சியில் நடைபெறும் ஆயர்கள்

திருச்சி- கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை கடைபிடிப்பு? – குற்றச்சாட்டு

கூட்டத்தில் தலித் குருமார்களின் பெயர்களை பரிந்துரை செய்து, வாடிகனில் உள்ள போப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், சாதிய தீண்டாமையைக் கடைபிடித்து தலித் ஆயர்கள் பணிக்கு குருமார்கள் புறக்கணிப்பை கண்டித்து திருச்சியில் வரும் 24ம் தேதி கண்டண ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.