சரிந்து விழுந்த மேற்கூரை: திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு!

 

சரிந்து விழுந்த மேற்கூரை: திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு!

கனமழையால் திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பிரதான சந்தைகள் அடைக்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டும் மூடப்பட்டது. பிறகு மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வணிகத்துக்கு ஏதுவாக தற்காலிக இடங்களில் சந்தை அமைக்கப்பட்டது. அதாவது தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உழவர் சந்தை மைதானத்தில் ஆஸ்பெட்டாஸ் மற்றும் இரும்பினால் ஆன தற்காலிக மேற்கூரை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

சரிந்து விழுந்த மேற்கூரை: திருச்சி தற்காலிக காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு!

இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, உழவர் சந்தை தற்காலிக மார்க்கெட் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. வழக்கம் போல இன்று வியாபாரிகள் விற்பனை செய்து கொண்டிருந்த போது , மேற்கூரை சரிந்து விழுந்ததால் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்த வியாபாரிகள் உட்பட அனைவரும் வெளியேறியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.