திருச்சி பெல் நிறுவனத்திலும் ஆக்சிஜன் தயாரிக்கலாம்! மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்

 

திருச்சி பெல் நிறுவனத்திலும் ஆக்சிஜன் தயாரிக்கலாம்! மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்

திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரத்தை உங்கள் பார்வைக்கு எடுத்துவருகிறேன். இதன் மீது உரிய பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும்.

திருச்சி பெல் நிறுவனத்திலும் ஆக்சிஜன் தயாரிக்கலாம்! மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்

எனது சொந்த ஊரான திருச்சியில் அமைந்துள்ள ‘பெல்’ நிறுவனத்தில், மூன்று ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் அளவு உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால், இவை கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து செயல்படாமல் உள்ளது. ஆனால், தொழில்நுட்ப வல்லூநர்கள், நீர் குளிரூட்டி, கம்பரஸர் உள்ளிட்ட ஆறு தடைகளை பராமரித்து மீண்டும் செயல்பட வைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

ஆகவே நாட்டின் அவசர அவசிய தேவையை கருத்தில் கொண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் மணிக்கு 140 மெட்ரிக் க்யூப் ஆக்ஸிஜன் தயாரிக்கும் திறன் கொண்ட செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை உடனடியாக இயக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.