கொரோனா பணி நிமித்தமாக வெளியே சென்ற வருவாய் ஆய்வாளர் விபத்தில் மரணம்.. மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

கொரோனா பணி நிமித்தமாக வெளியே சென்ற வருவாய் ஆய்வாளர் விபத்தில் மரணம்.. மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் பகுதியின் வருவாய் ஆய்வாளராக இருந்தவர் சேகர். அரசு அதிகாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதை போல இவரும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இவர் கொரோனா பணிக்காக, நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சேகர் மீது பலமாக மோதியுள்ளது.

கொரோனா பணி நிமித்தமாக வெளியே சென்ற வருவாய் ஆய்வாளர் விபத்தில் மரணம்.. மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த சேகரை, பொதுமக்கள் மீட்டு தொட்டியம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த அவர், இன்று காலை உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று சேகரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

கொரோனா பணி நிமித்தமாக வெளியே சென்ற வருவாய் ஆய்வாளர் விபத்தில் மரணம்.. மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வருவாய் ஆய்வாளர் மீது மோதிய அந்த வாகனத்தை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு சிசிடிவி காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.