திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

திருச்சி – 04.09.20

திருச்சி புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ஆற்றில் குளிக்க தடைவிதித்து, கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வனத்துறை எச்சரிக்கை

திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

திருச்சியிலிருந்து 72கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏழைகளின் குற்றாலம் எனப்படுவதும், கொல்லிமலை அடிவாரத்தில் இயற்கை எழில்கொஞ்சும், ரம்மியமாக காட்சியளிக்கும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதுமான புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு தற்போது ஆறு மற்றும் ஓடைகளில்

திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

தண்ணீர்வருவதாலும், இ-பாஸ் ரத்துசெய்யப்பட்டதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே கொல்லிமலையில் பெய்யும் கனமழையால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு புளியஞ்சோலை வழியாக வரும் அய்யாறு ஆற்றில் தற்போது தண்ணீர் செம்மண் நிறத்தில் வெள்ளமென மிகுந்த ஆர்பரிப்புடன் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

இதனால் புளியஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளவும், நீர்நிலைகளில் இறங்கவேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதேநேரம் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஆற்றில் குளிக்க

திருச்சி – புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் 6ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு

வேண்டாம் என எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதனிடையே புளியஞ்சோலை வழியாக பாயும் அய்யாறு ஆற்றில் செல்லும் தண்ணீர் கண்ணணூர், தண்டலை, திருந்தியமலை சென்று முக்கொம்பு மேலணையில் காவிரிஆற்றுடன் கலப்பதால் இங்கு தண்ணீர் சேமித்துவைக்க ஏதுவாக தடுப்பணைகள் அமைத்து மற்றகாலத்தில் தண்ணீர் தேவையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.