நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

 

நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருச்சி

திருச்சியில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி தீபாவளி பண்டிகைக்கு துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள என்.எஸ்.பி. சாலை, சின்னக்கடை வீதி, பெரியக்கடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள்,

நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இனிப்பகங்கள் என சிறிதும் பெரிதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி இன்று தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க, திருச்சி மட்டுமின்றி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் நகரின் முக்கிய கடைவீதிகள் மக்கள் வெள்ளத்தில் அலைமோதியது.

நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இதனையொட்டி, கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்கவும் மலைகோட்டை பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசார், அப்பகுதியில்
பொருத்தப்பட்டுள்ள 127 சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொருட்கள் வாங்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.