திருச்சி- 10 பைசாவிற்கு பிரியாணி – கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருச்சி- 10 பைசாவிற்கு பிரியாணி – கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருச்சி

திருச்சியில் 10 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்க, கொரோனா அச்சத்தையும் மறந்து ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சியில் உள்ள பிரபல பிரியாணி கடையில், 10 பைசாவுக்கு

திருச்சி- 10 பைசாவிற்கு பிரியாணி – கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த 500-க்கும் மேற்பட்டோர், கொரோனா அச்சத்தையும் மறந்து அதிகாலை 5 மணி முதலே கடை வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது முதலில் வந்த 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருச்சி- 10 பைசாவிற்கு பிரியாணி – கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இதனையடுத்து 10 பைசா நாணயங்களை வழங்கி, அவர்கள் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்நிலையில், பின்னால் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். விளம்பரம் கொடுக்கும் போது 100 பேருக்கு வழங்குவதாக மிக சிறியதாக எழுதி வைத்ததால் தங்களுக்கு தெரியவில்லை என்று கூறிய அவர்கள் 10 பைசா நாணயத்துடன் வரும் அனைவருக்கும் பிரியாணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த கடையின்
உரிமையாளர்,

திருச்சி- 10 பைசாவிற்கு பிரியாணி – கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பழங்கால நாணயங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், உலக உணவு தினத்தை கொண்டாடும் விதமாகவும் 100 பேருக்கு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தார். ஆனால், இவ்வளவு பேர் வருவார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அவர், அடுத்த முறை நிறைய பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்வோம் என தெரிவித்தார்.