பழங்குடியினர் துணைப்பொதுச்செயலாளராக சட்டத்திருத்தம்!

 

பழங்குடியினர் துணைப்பொதுச்செயலாளராக சட்டத்திருத்தம்!

திமுகவில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரும் துணைப்பொதுச்செயலாளராகும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பழங்குடியினர் துணைப்பொதுச்செயலாளராக சட்டத்திருத்தம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுசெயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி. ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக கட்சி தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து சட்ட திருத்தத்தின் படி பொதுச் செயலாளர்களாக ஆ. ராசா, பொன்முடி இருவரும் தேர்வாகினர்.

பழங்குடியினர் துணைப்பொதுச்செயலாளராக சட்டத்திருத்தம்!

இந்நிலையில் திமுகவில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரும் துணைப்பொதுச்செயலாளராகும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், மகளிர், பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே துணைப்பொதுச்செயலாளராக நியமிக்க சட்டம் உள்ள நிலையில் தற்போது பழங்குடியினரும் துணைப்பொதுச்செயலாளராகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவர் துணைப்பொதுச்செயலாளராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.