“பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தைக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

“பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தைக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை”  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நியூமோகோக்கல் தடுப்பூசி போடும் பணியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

“பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தைக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை”  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பிளீச்சிங் பவுடர் உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட குழந்தை இசக்கியம்மாளுக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் சென்னையில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டிய காரணத்தால் என்னுடைய எம்.எல்.ஏ விடுதியில் அவர்களை தங்கக் கூறியுள்ளேன். உணவு கூட சாப்பிட முடியாமல் இருந்து வந்த குழந்தை தற்போது உடல்நலம் தேறி வருகிறது.

“பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தைக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை”  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

எழும்பூர் மருத்துவமனைக்கு 6 கிலோ எடையுடன் சிகிச்சை பெற வந்த குழந்தை தற்போது 8 கிலோவாக மாறியுள்ளது. நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து குழந்தைகளை காக்க தடுப்பூசி போட நடவடிக்கை; 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்படும்” என்றார்.