`2 ஆண்டு முன்பகை; ஆயுதங்களுடன் ரவுண்ட் கட்டிய கும்பல்!’- காலையிலேயே டிராவல்ஸ் அதிபருக்கு நடந்த துயரம்!

 

`2 ஆண்டு முன்பகை; ஆயுதங்களுடன் ரவுண்ட் கட்டிய கும்பல்!’- காலையிலேயே டிராவல்ஸ் அதிபருக்கு நடந்த துயரம்!

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் அருகே முன்பகை காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையிலே நடந்துள்ள கொலையால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தப்பி ஓடிய ஓடிய கொலை கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

`2 ஆண்டு முன்பகை; ஆயுதங்களுடன் ரவுண்ட் கட்டிய கும்பல்!’- காலையிலேயே டிராவல்ஸ் அதிபருக்கு நடந்த துயரம்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகரில் வசித்து வந்தவர் மகேந்திரன். இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் தொழில் செய்து வந்ததோடு, சமூக பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக 2018ம் ஆண்டு அந்த பகுதியை சார்ந்த சாலமன், தமிழ் என்ற இளைஞர்களுடன் மகேந்திரன் வாக்குவாதம் செய்ததோடு, மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு திருநின்றவூர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

`2 ஆண்டு முன்பகை; ஆயுதங்களுடன் ரவுண்ட் கட்டிய கும்பல்!’- காலையிலேயே டிராவல்ஸ் அதிபருக்கு நடந்த துயரம்!

இது தீராத முன்பகையாக இருந்து வந்துள்ளது. மகேந்திரனை தீர்த்துக் கட்ட அந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மகேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சாலமன், தமிழ் மற்றும் 2 இளைஞர்கள் சேர்ந்த இன்று காலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. அப்போது, மறைத்துவைத்திருந்த அரிவாள், கத்தியை கொண்டு மகேந்திரனை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மகேந்திரன் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உயிருக்கு பேராடிகொண்டிருந்த மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மகேந்திரன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகவுள்ள தமிழ், சாலமன் மற்றும் அவர்களது நண்பர்களை தேடிவருகின்றனர்.

`2 ஆண்டு முன்பகை; ஆயுதங்களுடன் ரவுண்ட் கட்டிய கும்பல்!’- காலையிலேயே டிராவல்ஸ் அதிபருக்கு நடந்த துயரம்!

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, மகேந்திரன் டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்ததோடு, சமூகப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். யார் உதவிக் கேட்டாலும் உடனே சென்று உதவி செய்பவர் மகேந்திரன். கடந்த 2018ம் ஆண்டு திருநின்றவூர் பகுதியில் மகேந்திரன் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை அவர்கள் பகையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை மகேந்திரனுடன் அந்த இளைஞர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கிடையே மோதல் அதிகரித்துள்ளது. மகேந்திரனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கும்பல் வந்து தகராறு செய்துள்ளது. அவர்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் கத்தியால் மகேந்திரனை படுகொலை செய்துள்ளனர். 4 பேரும் தப்பிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம். கொலையாளிகளை பிடித்த பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று முடித்துக் கொண்டனர்.