ஈரோட்டில் போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 

ஈரோட்டில் போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரி, ஈரோட்டில் பாஜக போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு சென்னிமலைரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், மாநில துணைத் தலைவர் பூபதி, அமைப்பு செயலாளர் தனசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேஷ், பொருளாளர் லிங்கேஸ்வரன் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவும், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை, மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதிய உயர்வு அடிப்படையில் உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், மத்திய அரசு அறிவித்த 11 சதவீத அகவிலைப்படி உயர்வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.