இறந்தவர்கள் மூலம் எவ்வளவு மணி நேரத்து கொரோனா பரவும்? – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

 

இறந்தவர்கள் மூலம் எவ்வளவு மணி நேரத்து கொரோனா பரவும்? – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

இறந்தவர்கள் மூலம் கொரோனாத் தொற்று பரவும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல், உறவினர்களிடம் வழங்கப்படுவது இல்லை. தொற்று பரவல் வாய்ப்பு காரணமாக இறந்தவரின் உடல் நேரடியாக இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு அனுப்பப்படுகிறது. இறந்தவரின் முகத்தைக் கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இறந்தவர்கள் மூலம் எவ்வளவு மணி நேரத்து கொரோனா பரவும்? – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

இறந்தவருக்கு தங்கள் மதப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியவில்லையே என்று குடும்பத்தினர் வேதனையில் ஆழ்கின்றனர். இந்த சூழலில் இறந்தவர்கள் மூலம் கொரோனாத் தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து எய்ம்ஸ் உடற்கூறு ஆய்வுத் துறைத் தலைவர் டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில், “கொரோனா வைரஸ் இறந்த நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டைக் குழிக்குள் 12 முதல் 24 மணி நேரம் வரையில் உயிரோடு இருக்கலாம். அந்த நேரத்தில் தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த 100 பேரின் உடலை நாங்கள் ஆய்வு செய்தோம். 12 மற்றும் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. 24 மணி நேரத்துக்குப் பிறகு மூக்கு மற்றும் தொண்டைக்குழிப் பகுதியில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது இல்லை கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில் 12 முதல் 24 மணி நேரம் வரையில் பரவலுக்கு வாய்ப்புள்ளது” என்றார்.

மூக்கு மற்றும் வாய்ப் பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் மூடப்படுவதாலும், உடலில் இருந்து வேறு வழிகளில் திரவம் கசிவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலமும் கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்திவிடலாம். அதன் பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடலைக் கொடுப்பதில் எந்த பாதிப்பும் இருக்காது. இருப்பினும் உடலைப் பெறுபவர்கள் கை கிளவுஸ், மாஸ்க், பிபிடி உடை, கண்ணாடி அணிந்துதான் இறுதிச் சடங்கை செய்ய வேண்டும். உடலை எரித்த பிறகு இறந்தவரின் அஸ்தி, எலும்பைப் பெறுவதில் எந்த பிரச்னையும் இல்லை. அதன் வழியாக கொரோனா பரவாது” என்றார்.