45 பேரின் கோரிக்கையை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிய முதல்வர்

 

45 பேரின் கோரிக்கையை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிய முதல்வர்

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திருப்பூர் சென்ற மு.க.ஸ்டாலினிடம், 10 ஆண்டுகளாக வீடு கேட்டு போராடி வருகிறோம். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் வீடு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர் திருநங்கைகள். ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் அப்போது அவர்களிடம் உறுதி அளித்திருந்தார். அதன்படியே திருநங்கைகளுக்கு தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

45 பேரின் கோரிக்கையை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிய முதல்வர்

திருப்பூர் மாவட்டம் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 256 வீடுகளில் ஆட்சியர் வினித் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் திருநங்கைகள்45 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒதுக்கீடு ஆணையை பெற்றுக்கொண்டனர்.

45 பேரின் கோரிக்கையை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிய முதல்வர்

தங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து 100 நாட்களுக்குள் வீடு ஒதுக்கிய முதல்வருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கும் திருநங்கைகள், ஒதுக்கீடு தொகையை குறைக்க வேண்டும் அல்லது இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.