வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

 

வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில், வீட்டு மனைப்பட்டா கோரி திருநங்கைகள் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த திருநங்கைகள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.

வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதால், அருகேயுள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வசூல்செய்து பிழைப்பு நடத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு ஒழுங்கான வேலை கிடைப்பதில்லை என்றும் கூறினர். மேலும், வீட்டுமனை கோரி ஏற்கனவே அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளித்ததாகவும், இதனை உரிய விசாரணை நடத்தி கருணை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க கேட்டுகொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்