Home உலகம் ஆண் ,பெண் இரு டாய்லெட்டுக்கும் போக முடியலே - தனி டாய்லெட் கேட்டு வழக்கில் வென்ற திருநங்கை.

ஆண் ,பெண் இரு டாய்லெட்டுக்கும் போக முடியலே – தனி டாய்லெட் கேட்டு வழக்கில் வென்ற திருநங்கை.

அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆடம்ஸ் என்ற ஒரு திருநங்கை ,தங்களுக்கென்று ஒரு கழிவறை இல்லாததால் தான் பட்ட கஷ்டத்தினால் இனி பள்ளிகளில் திருநங்கைகளுக்கு தனி கழிவறை வேண்டுமென்று போராடி , மூன்றான்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் வெற்றி பெற்றார் .


பிளோரிடாவை சேர்ந்த ஆடம்ஸ் பிறக்கும்போது பெண்ணாக பிறந்து தன்னுடைய 14ம் வயதில் ஹார்மோன் குறைபாடால் திடீரென திருநங்கையாக மாறினார் .
இதனால் தன்னுடைய வீட்டிலும் ,சமூகத்திலேயும் அவர் பட்ட கஷ்டங்களினாலும் தான் பள்ளியில் படிக்கும்போது தனி கழிவறை இல்லாததால் பட்ட அவஸ்தைகளாலும் 2017ம் ஆண்டு அங்குள்ள கோர்ட்டில் திருநங்கைகளுக்கு தனி டாய்லெட் வேண்டி வழக்கு தொடர்ந்தார் .மூன்றாண்டுகள் இந்த வழக்கை விசாரித்த கோர்ட் அவருக்கு சார்பாக இனி பள்ளிகளில் திருநங்கை மாணவர்களுக்கு தனி டாய்லெட் கட்ட உத்தரவு பிறப்பித்தது .
இந்த வழக்கில் வெற்றி ஏற்ற ஆடம்ஸ் இது பற்றி கூறுகையில் ,திருநங்கைகள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுவதாலும் மேலும் தங்களின் வீடுகளிலேயே அவர்கள் ஒதுக்கப்படுவதாலும் அவர்கள் படும் கஷ்டங்களை போக்கவும் ,தான் பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆண்கள் கழிவறையில் சென்றபோது அங்குள்ள சில ஆண்கள் தன்னை அங்கு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியதால் இப்படி தான் வழக்கு போட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .

மாவட்ட செய்திகள்

Most Popular

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...
TopTamilNews